Thursday, January 15, 2009

Mahabharat in tamil, Paruvam, Uba Pandavam

மகாபாரதம் - ராஜாஜி
வெளியீடு:
வானதி

ராஜாஜியால் எழுதப்பட்ட இந்நூல், வானதி பதிப்பகத்தார் வெளியிட்டில் மகாபாரதம் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவருகிறது. என்னுடைய கல்லூரி நாட்களில் எனக்கு இந்த புத்தகம் படிக்கக்கிடைத்தது.
சிறுவயதில் தூர்தர்ஷன் டிவியில் பாரதக் கதைகளை ஆர்வமுடன் பார்த்த நாட்கள் உண்டு. அதுவும் சண்டைக் காட்சிகளை மட்டுமே பார்த்துவிட்டு மற்ற கட்சிகளை ஒதுக்கிவிடுவேன்.

மகாபாரதம் முழுவதிலும் உள்ள முக்கியமான கதாப்பாத்திரங்கள் அனைத்தையும் எளிய முறையில், கோர்வையுடன் எழுதியது அவருக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வாரம்.
சாந்தனு மஹாராஜா காதல் வேகத்தில் கங்கைக்கு செய்து கொடுத்த சத்தியம், பிதாமகனே சாந்தனுவுக்கு சத்தியவதியை மணம்முடிக்க மீனவ மன்னனிடம் சென்றது என ஒவ்வொரு அத்தியாயமும் தேர்ந்த சிற்பியின் வெளிப்பாடு. பீஷ்மர் அவருடைய தம்பிகளான விசித்திர வீரியரியன், அவனுடைய புத்திரர்களான திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் வேலைக்காரிக்கு பிறக்கும் மகன் விதுரன், குந்தி, காந்தாரி, கௌரவர்கள், பாண்டவர்கள் என ஒவ்வொரு நபர்களுக்கும் தனிக் கதைகள். குழந்தை பருவத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் வளரும் பொறாமை மற்றும் பகையின் கதை. ஆச்சாரியர்களான கிருபர், துரோணர் கதைகள். துரோணர் மகன் அசுவத்தாமன், துருபதன் அவனுடைய மகன் திருஷ்டத்யும்னன், மகள் திரௌபதி. பீஷ்மனை வதம் செய்ய பிறவி எடுத்த சிகண்டி என இது ஒரு புறம் இருக்க, கீதையை உபதேசம் செய்த மாயக்கண்ணன் என கதையில் வரும் விசேஷமான அத்தனை கதா பாத்திரங்களையும் கண்முன் நிருத்துவார். இடியாப்ப சிக்கலான பாரதக்கதைகளை, அவருடைய தேர்ந்த எழுத்தின் மூலம் வாசகர்களுக்கு எளிமையாக புரியும்படி செய்துள்ளார்.

வானதி
பதிப்பகத்தார் வெளியீட்டில் வரும் இந்த புத்தகம், இன்றைக்கும் சரி சந்தைக்கு வந்த ஒரே வாரத்தில் தீர்ந்துவிடும்.

குறிப்பு: ஒரு முறை ராஜாஜியிடம் இதுநாள் வரை உங்களுக்கு மனநிறைவை தந்த செயல் எது என்று கேட்கப்பட்டதாம். அதற்கு பாரதம் மற்றும் ராமாயண காவியங்களை தொடராக எழுதியது என்று கூறினாராம்.


மகாபாரதம் - ராஜாஜி
பருவம் - பைரப்பா(கன்னட மொழிபெயர்ப்பு)

வெளியீடு:
சாகித்ய அகாடமி புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.

நான் என்னுடைய பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பொன்னேரி கிளை நூலகத்திற்குச் சென்று வருவது வழக்கம். பச்சையப்பன் கல்லூரியில் Msc maths படித்துக் கொண்டிருந்ததால் பொன்னேரியிலிருந்து கல்லூரிக்கு சென்று வர மூன்று மணி நேரம் ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே ரயில் பயணத்தின்போது படிக்க எனக்கு பிடித்த புத்தகங்களை நூலகத்தில் இருந்து எடுத்துக்கொள்வேன். அப்படி நான் புத்தகங்களை தேடிக்கொண்டு இருந்தபொழுது பருவம் என்ற மொழி பெயர்ப்பு நாவல் காணக்கிடைத்தது. இந்த படைப்பிற்கு கன்னட எழுத்தாளர் பைரப்பவிற்கு சாகித்திய விருது கிடைத்திருக்கிறது.

பருவம் என்ற தலைப்பை பார்த்தவுடன் இது காதல், குடும்ப சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமோ என்று நினைத்தேன். இருந்தாலும் சாகித்ய அகடமி பரிசு பெற்ற புத்தகம் என்பதால் விரும்பி எடுத்துக்கொண்டேன். அருமையான மொழிநடை, தேர்ந்த மொழிபெயர்ப்பு. ராஜாஜியிடமிருந்து மாறுபட்ட நடை. நான் படித்த புத்தகங்களில் முழு மனநிறைவைக் கொடுத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.


உப பாண்டவம் - எஸ். ராம கிருஷ்ணன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்

சமீப எழுத்தாளர்களில் எஸ். ராம கிருஷ்ணன் புத்தகங்களை விரும்பி படிக்கிறேன். இவருடைய துணை எழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் அனைத்தும் ஆனந்த விகடனில் பெரிய வெற்றியை பெற்ற தொடர்கள். இவர் எழுதிய நாவலான உப பாண்டவம் பாரதக் கதைகளை வேருதளத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்காமல் சோர்ந்துபோயிருந்த சமயம் ஒரு யோசனை தோன்றியது. எஸ். ரா அவர்களுக்கே phone செய்து நேரடியாக விசாரித்தாலென்ன? அவரிடமே நேரடியாக புத்தகத்தை வாங்கினாலென்ன?...

உடனே அவருடைய phone number கண்டுபிடித்து தொடர்புகொண்டேன். அவருடைய மனைவிதான் என்னுடன் பேசினார். எஸ்.ரா- வைப்பற்றி விசாரித்துவிட்டு புத்தகத்தைப்பற்றியும், உங்களிடம் விலைக்கு கிடைக்குமா என்பதைப் பற்றியும் விசாரித்தேன்.

தி நகரிலுள்ள ஒரு புத்தக நிலையத்தின் பெயரைச்சொல்லி அங்கு கிடைக்குமென்றார். தேடிக்கண்டுபிடித்து அந்த கடைக்கு சென்றால் அங்கும் இல்லை என்று சொன்னார்கள். நீண்ட நாள் கழித்து Any Indian (www.anyindian.com) புத்தக கடைக்கு சென்றிருந்தேன். அங்கு தற்செயலாக உப பாண்டவம் நாவலை பார்க்க நேர்ந்தது. உடனே விலைக்கு வாங்கிவிட்டேன்.

பாரதக்கதை நடந்ததாக இன்று வரை நம்பப்படும் பல இடங்களுக்கும் நேரில் சென்று, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை என அவர்களின் வழியாக கதைகளைக் கொண்டு செல்கிறார்.

புத்தக முன்னுரையில் இவர் கூறியது போல் "மகா பாரதம்" ஒரு வார்த்தையாக இவருக்கு அறிமுகமாகி இருந்தாலும், சரியான எழுத்தின் மூலம் முழுமையான படைப்பாக நமக்கு தந்திருக்கிறார். இந்தப் புத்தகம் இப்போது பல இடங்களிலும் கிடைக்கிறது.

இவருடைய மற்ற படைப்புகளையும், வலைத்தளத்தையும் காண இங்கு செல்லவும் : http://www.sramakrishnan.com


5 comments:

Unknown said...

நண்பரேஎ,எனக்கு ராகுல சாங்கிருதியாயனின் ஊர் சுற்றி புராணம் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா

Unknown said...

நண்பரே,எனக்கு ராகுல சாங்கிருதியாயனின் ஊர் சுற்றி புராணம் எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா

Unknown said...

தாகம் பதிப்பகத்தில் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் தான் நான் வாங்கினேன்.

புத்தகக் கண்காட்சியில் அவசியம் நீங்கள் வாங்கலாம்.

ஜெயவேலன் said...

கீழ்கண்ட வலைபதிவினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

அருட்செல்வபேரரசன் என்பவரின் தன்னலமற்ற தனிஒரு மனிதரின் உழைப்பால் எளிய தமிழில் படங்களுடன் உருவாகும் முழு மகாபாரதம்...
வண்ணப்படங்களுடன் எளிய தமிழில் முழு மகாபாரதம் மிக அற்புதமான மொழிபெயர்ப்பு.அருமையான எளிய நடையில். படித்து பயன் பெறுவீர்."
முழு மஹாபாரதம்
கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட ""The Mahabharata"" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்... தயாரிப்பில்...)
இவரின் மனோதிடம் வெல்லும்.சரித்திரம் இவர் பேர் சொல்லும்.

Unknown said...

Where is the link jeyavelan?